பாடசாலை விதிகள்
- பாடசாலைக்கு காலை 7:30 மணிக்கு முன் வருகை தர வேண்டும்.
- பாடசாலைக்கு நேரம் தவறி வருபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்.
- காலைக் கூட்டத்திற்கு முன்பதாகவே மாணவர்கள் பாடசாலை வளாகத்தை சுத்தம் செய்தல் வேண்டும்.அப் பணியை மாணவ தலைவர்கள் வழிநடத்த வேண்டும்.
- காலை கூட்டத்தை மாணவ தலைவர்கள் நேர்த்தியாக ஒழுங்கமைக்க வேண்டும்.அதற்கு மாணவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
- தினமும் காலை கூட்டத்தில் அனைத்து மாணவர்களும் உடற்பயிற்சி செய்தல் அவசியம்.
- காலை கூட்டத்தில் மாணவர்களின் சுத்தம், மற்றும் சீருடைகள் முறையாக உள்ளதா என கண்காணிக்கப்படும்.
- பாட வேளையில் மாணவர்கள் வெளியே சுற்றி திரிய தடை.
- பாடசாலை முடிந்ததும் மாலை கூட்டத்திற்கு அனைத்து மாணவர்களும் வருகைதர வேண்டும்.
- பாடசாலைக்கு வரும்போது பாடசாலையை விட்டு வீடுகளிற்கு செல்லும் போதும் நடைபாதையில் செவ்வனே முறையாக செல்ல வேண்டும்.
