பாடசாலை
- 1987.05.05 திகதி பது/மாதவ உயர் 2 தமிழ் வித்தியாலயம் எனும் பெயருடன் இப்பாடசாலை தோட்ட நிர்வாகத்தினரால் ஆரம்பிக்கப்பட்டது.
- 1977.06.17 திகதி திரு p.p முத்தையா என்பவர் அதிபராக பதவியேற்றார்.
- 1983.02.28 திகதி திரு சி.முத்துலிங்நாதன் என்பவர் அதிபராக பதவியேற்றார்.
- 1983.06.28 பாடசாலை சில காரணங்களால் மூடப்பட்டது.
- 1985 சுவீடன் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தினால் மீண்டும் பாடசாலை திறக்கப்பட்டது.
- 1985.02.14 k.செல்வராஜா என்பவர் அதிபராக பதவியேற்றார்.
- 1985.06.24 A.சகாதேவன் என்பவர் அதிபராக பதவியேற்றார்.
- 1987.05.05 திகதி திரு.சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களால் அங்கணி எனப்படும் புதிய கட்டிடம் திறந்துவைக்கப்பட்டதோடு,எம் பாடசாலை பது/மடுல்சீமை தமிழ் மகா வித்தியாலயம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- 1987.05.21 திகதி திரு.M.ரெங்கசாமி என்பவர் அதிபராக பதவியேற்றார்.
- 1987 ஆண்டு எமது பாடசாலையில் மினி விஞ்ஞான ஆய்வுகூடம் கட்டுவிக்கப்பட்டது.
- 1988.05.10 திகதி திரு A.இராமசாமி என்பவர் அதிபராக பதவியேற்றார்.
- 1990 அழலவன் எனும் 02 வது கட்டிடம் திறக்கப்பட்டது.
- 1990களில் முதல் முதலாக எமது பாடசாலை மாணவர்கள் க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோன்றினார்கள்.
- 1994இல் எமது பாடசாலை மாணவர்கள் முதல் முதலாக புலமை பரீட்சையில் சித்தியடைந்தார்கள்.
- 1995 அயிலவன் எனும் மூன்றாவது கட்டிடம் ISD அமைப்பின் உதவியுடன் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.
- 1998.04.04 அதிபர் திரு இராமசாமி அவர்களின் உதவியுடன் பத்தாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது
- 1999.10.14 அன்று திரு K.திருலோகசங்கர் என்பவர் அதிபராக பதவியேற்றார்.
- 2000.05.15 அன்று எமது பாடசாலையில் க.பொ.த உயர்தரம் ஆரம்பிக்கப்பட்டது.
- 2000.06.05 எமது பாடசாலைக்கு நூலகம் ஒன்று அமைக்க ஒப்பந்தமிடப்பட்டது.
- 200204.10 எமது பாடசாலை மாணவர்கள் முதல் முதலாக க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோன்றினார்கள்.
- 2005-07-11 விஞ்ஞான ஆய்வு கூடம் திறக்கப்பட்டது.
- 2006.03.06 அன்று திருமதி சுகந்தி யோகேஸ்வரன் என்பவர் அதிபராக பதவியேற்றார்.
- 2007.11.12 அலங்கை கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.
- 2007.09.15 எமது பாடசாலைக்கு 23 கணினிகள் கிடைத்தது.
- 2010.02.12 புதிய கணினி நிலையம் ஒன்று திறக்கப்பட்டது.
- 2010.02.15அன்று திரு P.முத்துலிங்கம் அவர்கள் அதிபராக பதவியேற்றார்.
- எமது பாடசாலையை சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டது.
- பிரதான நுழைவாயில் அமைக்கப்பட்டது.
- மலசலகூட வசதிகள் மேம்படுத்தப்பட்டது.
- உயர்தரத்தில் மேலதிக பாடங்கள் சேர்க்கப்பட்டது
- திரு முத்துலிங்கம் ஐயா அவர்களின் தலைமையில் எமது பாடசாலையில் வெள்ளிவிழா நிகழ்வு நடாத்தப்பட்டது.
- சாதாரண தரம், உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகள் கிடைத்தது.
- ஆசிரியர்களுக்கான விடுதி அமைக்கப்பட்டது.
- அதிபர் விடுதி அமைக்கப்பட்டது.
- புதிய மலசலகூட வசதிகள் செய்துதரப்பட்டது.
- மகிந்தோதய ஆய்வு கூடம் அமைக்கப்பட்டது.
- 2020-11-19 திகதி எமது பாடசாலையில் அதிபராக S. முத்துக்குமார் அவர்கள் அதிபராக பதவியேற்றார்.
- பாடசாலையில் கட்டிடங்கள் புணரமைக்கப்பட்டது.
- புதிய மலசலகூட அமைக்கப்பட்டது.
- முள்வேலி அமைக்கப்பட்டது.
- சரஸ்வதி சிலை அமைக்கப்பட்டது.
- பாடசாலையின் உள்ளேயே பரீட்சை வினாத்தாள்களை பிரதி எடுக்கும் வசதி செய்யப்பட்டது.
- வருடாந்த பரிசளிப்பு விழா நடாத்தப்பட்டது.
- புலமை பரிசில், சாதாரண தரம், உயர்தர பெறுபேறுகளில் முன்னேற்றம் ஏற்பட்டது.
- .