அதிபர் உரை
“ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து”
எனும் வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க ஏழு பிறவியிலும் தமக்கு பாதுகாப்பு வழங்குவது நாம் கற்ற கல்வி .அக் கல்வியை சலிப்புறாது வழங்குவது பாடசாலை.அந்த வகையில் எமது பாடசாலையான பது/ மடுல்சீமை தமிழ் மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) கல்வியை முடிவுறாது வழங்கும் பணியை சிறப்புற செய்து வருகின்றது.மேலும் இங்கு பாடவிதான செயற்பாடுகளும் இணைபாடவிதான செயற்பாடுகளும் எமது பாடசாலையில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.அதற்கு சான்று எமது பாடசாலை மாணவர்களின் பெறுபேறுகளே.மேலும் பல்கலைக்கழகம் செல்வோரின் வீதமும் அதிகரித்துள்ளது.இப்பணியானது என்றுமே நீடித்து நிற்கும் இதில் எவ்வித ஐயமும் இல்லை.
நன்றி